
Youtuber Irfan
Youtuber Irfan: தொடர்ந்து பல சர்ச்சைகளில் அடுத்து அடுத்து சிக்கி வந்த இர்ஃபான் ரம்ஜான் அன்று சிலரை ஒருமையில் திட்டும் வீடியோவை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான நெட்டிசன்கள் இர்ஃபானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உணவு பிரியரான யூட்யூப்ர் இர்ஃபான் பலவிதமான உணவுகளை சாப்பிட்டு விட்டு வீடியோவாக எடுத்து ரிவ்யூ கொடுத்து வந்தார். அதன்படி கையேந்தி பவன் முதல் மிகவும் பிரபலமான நட்சத்திர ஹோட்டல்கள் வரை இர்ஃபான் சுவைக்காத உணவே கிடையாது என்று தான் கூற வேண்டும். இவ்வாறு உணவு பிரியர்களான பலருக்கும் இர்ஃபானை பிடித்தது.
எனவே இதனால் சோசியல் மீடியாவில் இர்ஃபானுக்கு தனி பட்டாளம் உருவானது இவ்வாறு பிரபலமான இவர் தற்பொழுது தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதன்படி இந்திய நாட்டில் குழந்தை பிறப்பிற்கு முன்பே பாலினம் குறித்து தெரிவிப்பது சட்டப்படி குற்றம் என இவர் சர்ச்சையில் சிக்கினார். தனக்கு பெண் குழந்தை தான் பிறக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்தது மிகவும் தவறு என்பதால் பலரும் இதனை எதிர்த்து வந்தார்கள்.
எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஆளுநர் ரவியுடன் இவருக்கு நெருங்கிய உறவு இருப்பதனால் இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் எம்.பி கனிமொழி போன்றவர்களுடனும் இவர் நெருங்கிய உறவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தனக்கு பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அருத்தது பெரும் குற்றமாகும் அதோட குழந்தை பிறக்கும் முழு வீடியோவையும் யூடியூப்பில் பதிவிட்டு இருந்தார். எனவே தமிழ்நாடு மருத்துவ துறை சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது.
பின்னர் தனியார் மருத்துவமனைக்கும் இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இர்ஃபான் கைது செய்யப்பட்டுள்ளார் என எதிர்பார்த்த நிலையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதற்கான விளக்கத்தையும் இர்ஃபான் கொடுத்திருந்தார். இப்படி அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வந்த இர்ஃபான் நேற்று ரம்ஜான் தினத்தன்று தனது குடும்பத்துடன் காரில் சென்று இல்லாதவர்களுக்கு உணவை வழங்கினார்.
அப்போது எதிர்பாராத ஒருவர் உணவு நமக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற எண்ணத்தில் வேகமாக முண்டியடித்து வாங்குகிறார் இதற்கு இர்ஃபான்அசிங்கமா இல்லையா இப்படியா வாங்குவீங்க கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா என திட்டுகிறார். இதனையும் தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் தற்பொழுது அந்த வீடியோ வைரலாக இதனை பார்த்த நெடிசர்கள் இர்ஃபானை கடுமையான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.