
vj. siddhu
Vj Siddhu: சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமாகி தற்பொழுது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்து இருப்பவர் தான் விஜே சித்து. சினிமாவில் அறிமுகமானதன் மூலம் பிரபலமானதை பார்த்திருக்கிறோம் ஆனால் சமீப காலங்களாக சோசியல் மீடியாவின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பிறகு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெறுகின்றனர்.
அதன்படி, சோசியல் மீடியாவில் பிரபலமானதன் மூலம் பட வாய்ப்புகளைப் பெற்று சினிமாவில் கலக்கி வரும் பல பிரபலங்களை காண முடிகிறது. அந்த வகையில் ஒருவர் தான் விஜே சித்து. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரவேற்பு இருப்பதனால் இவர் நடிக்கும் படங்களையும் ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து வி.ஜே சித்து நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றினைப் பெற்ற திரைப்படம் தான் டிராகன். இயக்குனராக வேண்டும் என்ற ஆசை உடன் சினிமாவிற்கு வந்த விஜே சித்து அந்த வாய்ப்பு சரியாக அமையாத காரணத்தினால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார்.
இந்த சூழலில் தற்பொழுது இவருடைய இயக்குனராக வேண்டும் என்ற ஆசை நிறைவேற்றி விட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை விஜே சித்து இயக்கி அவரே ஹீரோவாக நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இப்படத்திற்கான ப்ரோமோ சூட்டிங் நடைபெற்று இருப்பதாகவும் அந்த ப்ரோமோவில் விஜே சித்து மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் இணைந்து நடித்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை வருகின்ற ஏப்ரல் மாதம் தெரிவிக்க இருப்பதாகவும் மே மாதத்தில் இதற்கான படப்பிடிப்புகள் துவங்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
ரசிகர்கள் மத்தியில் விஜே சித்துவிற்கு நல்ல மவுசு இருப்பதனால் சோசியல் மீடியாக்களையும் தாண்டி சினிமாவிலும் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. தற்பொழுதுள்ள பெரும்பாலான இளைஞர்களின் நல்ல என்டர்டைனராக உள்ளார் விஜே சித்து.