
Top 5 tamil serials
Top 5 tamil serials: சினிமாவை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால், முக்கியமான தொலைக்காட்சிகள், காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களை டிஆர்பி அடிப்படையில் கண்டறியப்பட்டு இதன் மூலம் டாப் 5 சீரியல்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
1.சிறகடிக்க ஆசை: டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கும் விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ தொடரில், முத்து-மீனா ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். தொடர்ந்து பரபரப்பான திருப்பங்கள் ஏற்படும் காட்சிகள், இந்த தொடரை மிகப்பெரிய ஹிட்டாக மாற்றியுள்ளது.
2. கயல்: இரண்டாவது இடத்தில் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி நடித்துள்ள ‘கயல்’ தொடர் பிடித்துள்ளது. பரபரப்பான கதைக்களத்துடன் செல்லும் இந்த தொடர், அதிகம் பார்க்கப்படும் ஒரு சீரியலாக உள்ளது.
3.சிங்கப்பெண்ணே: மூன்றாவது இடத்தில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிங்கப்பெண்ணே’ தொடர் உள்ளது. பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த தொடர், மகேஷ் – ஆனந்தி கதையின் திருப்பங்களால் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
4. மூன்று முடிச்சு:
குடிக்க பழக்கமடைந்த கணவனை திருத்த மனைவி எவ்வாறு போராடுகிறார் என்பதை மையமாகக் கொண்டு சென்று கொண்டிருக்கும் ‘மூன்று முடிச்சு’ தொடர், நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
5. பாக்கியலட்சுமி: விஜய் டிவியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ தொடர், தற்போது இனியாவின் காதல் கதைக்களத்துடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
தமிழக தொலைக்காட்சி ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் இந்த தொடர்கள், தொடர்ந்து புதிய திருப்பங்களுடன் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.