
actress shriya saran
Actress Shriya Saran new look photos: முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரும் தங்களது கிளாமரான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றனர். முன்பெல்லாம் திரைப்படங்களில் தான் கவர்ச்சியாக நடித்து வந்தார்கள் ஆனால் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவிலும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அப்படி சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ரேயா சரணின் கவர்ச்சி போட்டோ ஷூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்தான் ஸ்ரேயா சரண்.
தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்த இவருக்கு ஹிந்தி படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இணைந்து மழை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றினை தந்தது இந்த படங்களுக்கு பிறகு முன்னணி நடிகையாக பிரபலமானார் ஸ்ரேயா சரண். நடிகை ஸ்ரேயா சரண் 2018ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ஆண்ட்ரி கோஷீவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்.

தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு குழந்தைகளும் உள்ளனர். எனவே திருமணத்திற்கு பிறகு தனது குடும்பத்திற்காக நேரம் செலுத்தி வந்த ஸ்ரேயா சரண் தற்பொழுது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வரையிலும் இவருக்கான மார்க்கெட் குறையாமல் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா சரண் தனது 42 வயதில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் 42 வயதிலும் இவ்வளவு கவர்ச்சியா.! என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ ஸ்ரேயா சரணின் அழகிய புகைப்படங்கள்.