
Actress Reshma Pasupuleti new look photos viral: நடிகை ரேஷ்மா பசுபுலெட்டியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரையில் பல பிரபலமான கதாபாத்திரங்களை செய்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி, அண்மையில் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த புதிய புகைப்படங்களால் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறார்.
பாக்கியலட்சுமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட சீரியல்களில் பாரம்பரிய உடையில் நடித்து வருபவர், ஆஃப்ஸ்கிரீனில் முற்றிலும் மாடர்ன் தோற்றத்தையே தழுவுகிறார். இதற்குச் சமீபத்திய எடுத்துக்காட்டாக, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட படுகவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் பிரசாத் பசுபுலெட்டி அவர்களின் மகளாக பிறந்த ரேஷ்மா, தனது ஆரம்ப காலத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றியிருந்தார். பின்னர் சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டதால், 2015ம் ஆண்டு மசாலா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன்பிறகு, பல சன் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, மக்களின் கவனத்தை பெற்றார். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரம் மூலம் அவர் பரவலாக பிரபலமானார்.

ரேஷ்மா, பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் பங்கேற்றதன் மூலம் பெரிய ரசிகர் ஆதரவினைப் பெற்றார். அதன் பின், பாக்கியலட்சுமி, சீதா ராமன், கார்த்திகை தீபம் போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், மாடர்ன் உடைகளில் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அரை டவுசர் அணிந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
